Saturday, January 7, 2012

mullapperiyar


அணைப்பிரச்சினையை அரசியலாக்குவதா?
முல்லைப்பெரியாறு அணைப்ரச்சினை தீவிரமடைந்து வரும் இந்நிலையில் கவலைக்கிடமளிக்கும் சில எண்ணங்கள் மனதை அலைக்கழிக்கின்றன.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது பாரத தேசத்தின் சிறப்பம்சமாக பன்னெடுங்காலமாகப்போற்றப்படுகிறது. பல மொழிகள்,பல மதங்கள்,பல சித்தாந்தங்கள் இணக்கத்தோடு வாழும் ஒரே நாடு இந்தியாதான் என்றால் அது மிகையாகாது. ‘செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று பாரதியாரால் பாடப்பட்ட தேசம் இது.தற்போது,அணை,நதிநீர் போன்ற பல பிரச்சினைகளால் மானிலங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்வது மனதிற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
முல்லைப்பெரியார் அணை உடையுமா உடையாதா, எத்தனை அடி உயரத்திற்கு அதில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும், அணையின் உயரத்தை அதிகரிக்கலாமா கூடாதா போன்ற technical கேள்விகளுக்கு சாமான்ய மக்களான நம்மிடத்தில் பதில் இல்லை.இத்துறையில் நிபுணர்கள் ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை. ஆனால் கேரளாவும் சரி, தமிழகமும் சரி,தனக்கு சாதகமாக அறிக்கை தரும் நிபுனர்களை நியமித்து அறிக்கை பெற்று தான் சொல்வதே சரி என்று வாதிட்டு வருகின்றன. இன்னிலையில் இரண்டு மாநிலங்களும் சேர்ந்து ஒரு ஒத்த முடிவை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை. இத்தகைய stale mate ஐ எதிர் பார்த்துத்தான் உச்ச நீதி மன்றம் 18/2/2010 அன்று ஒரு empowered committee ஐ நியமித்திருக்கிறது. இந்த கமிட்டியில் நடுநிலையான பல நிபுணர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்தக்கமிட்டியின் அறிக்கை February 2012 ல் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் இர்ண்டு மாநிலங்களும் இந்த அறிக்கையைப்பார்த்து அதன்படி முடிவெடுப்பதல்லவோ சரியாக இருக்கும்? இதை விட்டு பிரச்சினையை அரசியலாக்கி ஒன்றுமறியாத மக்களின் உணர்ச்ச்களை எழுப்பி இரண்டு மாநிலங்களிலும் வன்முறையைத்தூண்டி விடுவது எந்த விதத்தில் நியாயம்? தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்களைத்தடுப்பதும்,தமிழகத்திலுள்ள மனையாளிக்கடைகளை அடித்து நொறுக்குவதும் நம் தேசத்தின் அடிப்படை சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமையின் அடிவாரத்தையே தகர்ப்பதாக இருக்கிறது. இரண்டு மாநிலத்தின் மூத்த தலைவர்களும் இதை உணர்ந்து வன்முறையைத்தவிர்த்து உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டி யின் முடிவை ஏற்று செயல் பட்டு நம் நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவார்களா?
T.S.Krishnamurthy
GB,Subramanya Apartments
199,Lake View Road
West Mambalam
Chennai-600033

sasippeyarchi


மர்மம் என்ன?
சசிகலாவையும் அவரது கோஷ்டியையும் கூண்டோடு கட்சியிலிருந்தும் வீட்டிலிருந்தும் வெளியேற்றி கூடா நட்பை ஒருவாறாக முடித்துக்கொண்டதற்காக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நமது உள்ளம் நிறைந்த பாராட்டுகள்.அதே நேரத்தில் சில கேள்விகள் மனத்தில் எழுந்து  அலைக்கழிக்கின்றன.
சசிகலாவுக்கும் முதல்வருக்கும் உள்ளது 30 வருட நட்பு என்று கூறப்படுகிறது.ஒரு சாதாரண video கடை வைத்திருந்தவருடன் முதல்வருக்கு இவ்வளவு நெருக்கம் எப்படி ஏற்பட்டது? அதுவும் தன் வீட்டிலேயே நிரந்தரமாக இடம் கொடுக்கும் அளவுக்கு நட்பு எப்படி முற்றியது?
இதுவரை பலமுறை அவர்களது நட்பு முறிவடைந்து பின்னர் மீண்டும் சமாதானம் ஏற்பட்டு முதல்வர் சசிகலாவை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே சந்தேகத்திற்கிடமளிக்கும் நடவடிக்கைகளில் சசிகலா குழுவினர் ஏற்கனவே பலமுறை ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது. அப்படியிருக்க நிறைந்த அறிவாற்றலுக்கும் முதிர்ச்சிக்கும் பெயர் பெற்ற முதல்வர் தனது ஆருயிர்த்தோழியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்காமல் விட்டது எப்படி?
முதல்வர் வீட்டிலேயே இருந்து கொண்டு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஓர் இணை அதிகார மையத்தையே உருவாக்கும் அளவுக்கு தோழியை நம்பியது ஏன்?
அமைச்சர்கள்,அதிகாரிகள் நியமனத்தில் தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு பதவிகள் பெற்றுத் தந்ததாகவும் டெண்டர்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனம் முதல்வராலல்லவோ பரிந்துரைக்கப்படுகிறது அல்லது செய்யப்படுகிறது? அவ்வாறு நியமனத்திலோ பரிந்துரைகளிலோ ஒப்பிடும்போது சம்பந்தப்பட்ட நபரின் தகுதிகளைப்பற்றி அறியாமலா முதல்வர் ஒப்பிட்டிருப்பார்?
சசிகலா கோஷ்டியினரின் விரும்பத்தகாத நடவடிக்கைகளைப்பற்றி சிறிது காலமாகவே செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் கசிந்து வருகின்றன.அப்படியிருக்க அதே வீட்டில் இருக்கும் முதல்வருக்கு இந்த நடவடிக்கைகள் தெரியாதிருந்தது எப்படி?
அப்படி அதைப்பற்றி அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் முன்னதாகவே நடவடிக்கை எடுக்காதிருந்ததற்கும் இப்போது திடீர் என்று நடவடிக்கை எடுத்திருப்பதற்கும் உள்ள பின்னணி என்ன

margazhi


மாதங்களில் அவள் மார்கழி
மார்கழி மாதம் என்றாலே தென்னாட்டு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தனி உற்காகம்தான். அப்படியென்ன மார்கழி மாதத்திற்கு தனிச்சிறப்பு? ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல?
‘மாசாநாம் மார்கசீர்ஷோகம்’ என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார். மாதங்களில் நான் மார்கழி’ என்று பொருள்படும் இவ்வரிகள்தான் கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலுக்கு உத்வேகம்.
மார்கழி மாதம் முழுவதும் தென்னாட்டில் பக்திக்கும் ஆன்மீகத்துக்குமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. விடியற்காலையில் எழுந்து ஆலய தரிசனம் செய்து நாமசங்கீர்த்தனம் கேட்டு/செய்து கொசுறாக சுடச்சுட பொங்கல் பிரசாதத்தையும் ருசிக்கலாம். பழைய நாட்களில் நகர சங்கீர்த்தனம்(பஜனை செய்து கொண்டே நகர வீதிகளை வலம் வருவது) மிகப்பிரசித்தம்.(அன்னியன் திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்த ஞாபகம் வருமே?)இப்பொழுதும் சிறிய ஊர்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை(30 பாசுரங்கள்) மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை(20 பதிகங்கள்),திருப்பள்ளியெழுச்சி(10 பதிகங்கள்) ஆக 60 சொல்மாலைகளும் மார்கழி மாதம் முழுவதும் விடியற்காலையில் பக்தி பரவசத்துடன்  பலரால் குறிப்பாக பெண்களால் படிக்கப்படுகின்றன.ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் என்று போற்றப்படுபவை.அனேகமாக எல்லா தமிழ் tv channel களும் இப்பாசுரங்கள்/பதிகங்களை காலை நேரத்தில் இசையுடனும் நடனத்துடனும் பேரரிஞர்களின் விளக்க உரையுடனும் ஒளிபரப்புகின்றன.மேலும் தமிழ் நாடெங்கும் பல இடங்களில் திருப்பாவை/திருவெம்பாவை  சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
மார்கழி மாதத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் வீட்டு வாசல்களில் பெண்களால் போடப்படும் அழகழான வண்ணமயமான கோலங்கள். இந்த வண்ணக்கோலங்களுக்கக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் அளிக்கப்படுகின்றன.
மார்கழி மாதத்தில் திருமணம்,நிச்சயதார்த்தம் போன்ற மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. இந்த ஒரு மாதம் மட்டுமாவது மனது முழுதுமாக பக்தி மார்கத்தில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்பது காரணமாக இருக்குமோ?
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ப்ரசித்தி பெற்ற விழாவான ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்தான் கொண்டாடப்படுகிறது.திருவாதிரை என்றாலே என்னைப்போன்ற உணவுப்பிரியர்களுக்கு நினைவுக்கு வருவது அன்று நைவேத்யமாகச்செய்யப்படும் களியும் அதற்குத்துணையாக பல கறிகாய்களைக்கொண்டு செய்யப்படும் நாவில் எச்சில் ஊறச்செய்யும்  திருவாதிரைக்கூட்டும்தான்.
வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகப்போற்றப்படும் முக்கிய ஏகாதசி தினமும் மார்கழி மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது.ஸ்ரீரங்கம்,திருப்பதி போன்ற முக்கியமான வைஷ்ணவத்திருக்கோவில்களில் அன்றுதான் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.அன்று இவ்வாசலைக்கடந்து செல்பவர்கள் நேரே சொர்க்கத்திற்குச்செல்லும் பாக்யம் பெறுகிறார்கள் என்பது ஐதீகம். அதனாலேயே விடியல் முதலே அவ்வாசலைக் கடந்து பெருந்திரளான மக்கள்  கண் விழித்துக் காத்திருப்பதைக்காணலாம்.
சிறு வயதில் சொர்க்க வாசலை மிதித்து விட்டு சிறுவரும் பெரியோரும் விளையாடும் பரமபத சோபான படம் என்ற விளையாட்டு இன்னும் நினைவில் இருக்கிறது.ஏணீயும் பாம்புகச்ளுமாக இருக்கும் இந்தப் பட விளையாட்டு சோழி அல்லது dice  கொண்டு விளையாடப்படும்.ஏணியில் ஏறினால் சொர்க்கத்தை நொக்கிச் சென்றும் பாம்பில் மாட்டிக்கொண்டால் கீழே கீழே இறங்குவதும் இவ்விளையாட்டின் சுவாரஸ்யம்.
சென்னையின் முக்கியத்திருவிழாவான இசை விழா பெரும்பாலும் இந்த மார்கழி மாதத்தில்தான் நடத்தப்படுகிறது.

lokpal drama


The Lokpal Drama
The entire episode of the introduction of the Lokpal and related Bills, the debate in both Houses of Parliament , and the final farcical denouement in the Rajya Sabha seems to be a grand drama enacted to hoodwink the public. When the Lokpal Bill was initially being discussed, there was no indication about the requirement of a Constitution Amendment Bill to give a constitutional status to the Lokpal.  This was the brainchild of the heir-apparent. The Government latched on to the idea knowing  fully well that it did not have the required numbers in Parliament to get the Bill passed .Now that the constitution Amendment Bill has not been passed, it is not clear what will be the status of the Lokpal even if the Bill had been passed in both houses of Parliament or if it is passed in a subsequent session .
From the way the debate was going on in the Rajya Sabha it was very clear that there was no intention to get the Bill passed. The Government knew full well that it did not have a majority in the Rajya Sabha and hence cannot push through the Bill without the support of some of the opposition parties.Hence, it was simply prolonging the debate so that no vote could be taken saving itself the embarrassment of getting the Bill defeated. The intention of the Opposition seems to have been to somehow have a voting on the Bill so that it can clamor for the resignation of the Government.
If the Government and the Opposition had been serious about the passing of the bill they should have sat together and come out with an enactment acceptable to all. The entire episode shows clearly that our Parliamentarians lack the political will to bring about an effective measure to tackle the menace of Corruption in Public Places. 

lokpal drama


The Lokpal Drama
The entire episode of the introduction of the Lokpal and related Bills, the debate in both Houses of Parliament , and the final farcical denouement in the Rajya Sabha seems to be a grand drama enacted to hoodwink the public. When the Lokpal Bill was initially being discussed, there was no indication about the requirement of a Constitution Amendment Bill to give a constitutional status to the Lokpal.  This was the brainchild of the heir-apparent. The Government latched on to the idea knowing  fully well that it did not have the required numbers in Parliament to get the Bill passed .Now that the constitution Amendment Bill has not been passed, it is not clear what will be the status of the Lokpal even if the Bill had been passed in both houses of Parliament or if it is passed in a subsequent session .
From the way the debate was going on in the Rajya Sabha it was very clear that there was no intention to get the Bill passed. The Government knew full well that it did not have a majority in the Rajya Sabha and hence cannot push through the Bill without the support of some of the opposition parties.Hence, it was simply prolonging the debate so that no vote could be taken saving itself the embarrassment of getting the Bill defeated. The intention of the Opposition seems to have been to somehow have a voting on the Bill so that it can clamor for the resignation of the Government.
If the Government and the Opposition had been serious about the passing of the bill they should have sat together and come out with an enactment acceptable to all. The entire episode shows clearly that our Parliamentarians lack the political will to bring about an effective measure to tackle the menace of Corruption in Public Places. 

Sunday, December 25, 2011

swamimalai abhishaegam




மன்னார்குடி மாஃப்யாவின் வேலையா?
ஸ்வாமிமலையிலுள்ள அருள்மிகு ஸ்வாமினாதஸ்வாமி எங்கள் குலதெய்வம் ஆகையால் அடிக்கடி அங்கு சென்று அபிஷேகம் செய்வது வழக்கம். அபிஷேகக்கட்டணம் ரூபாய் 600 ஆக இருந்தது. அதேபோல் இந்த வருடம் டிசம்பர் முதல் வாரத்தில் அபிஷேகம் செய்யச்சென்றபோது அபிஷேகக் கட்டணம் ரூபாய் 600 லிருந்து ரூபாய் 1500 ஆக ஜூன் முதல் தேதியிலிருந்து உயர்த்தப்பட்டதாக அறிந்து அதிர்சி அடைந்தோம். 250% கட்டண உயர்வா? நல்ல வேளையாக கையில் போதுமான பணம் கொண்டு சென்றிருந்ததால் சமாளித்தோம்.கையில் அவ்வளவு பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? இக்கோவில் இந்து அற நிலையத்துறையின் நிர்வாகக் கட்ட்ப்பாட்டுக்குள் வருகிறது. அபிஷேக திரவியங்களிலோ முறைகளிலோ ஒரு மாறுதலும் இல்லாத நிலையில் இத்தகைய பெரும் உயர்வுக்கு என்ன அவசியம்?
இன்றைய தினமலரில் கோயம்பேடு வாகன நிறுத்த நிர்வாகத்தில் CMDA போர்வையில் மன்னார்குடி மாஃப்யாவைச்சேர்ந்த மகாதேவன் நடத்திய திருவிளையாடல்களைப் பற்றிப் படித்தபோது மேற்கண்ட கட்டண உயர்வும் இந்து அறநிலையத்துறையின் போர்வையில் மன்னார்குடிக் கும்பல் நடத்திய சதியோ என்று சந்தேகம் எழுகிறது. இது குறித்தும் தக்க விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகிறது.  

Friday, December 9, 2011

chardham yatra


Chardham Yatra
It has  been my long cherished desire to explore the nooks and corners of Incredible India and once I retired from service I started my expeditions/explorations in full swing along with my wife.  Accordingly, when a leading Yatra service provider announced the Chardham yatra, we booked our seats forthwith.
The pilgrimage to the four holy places of Gangotri, Yamunothri, Kedarnath and Badrinath is collectively known as Chardham yatra. These are located in the picturesque Uttaranchal and Chardham yatra is considered the holiest of pilgrimages. The yatra started from Delhi  via  Haridwar, and we travelled almost the entire stretch of  Himalayas. As is well known, the Holy Yamuna originates from Yamunothri and Ganges originates in Gangothri. Kedarnath has one of the twelve Jyotirlingas depicting Lord Shiva and Badrinath is one of the 108 Divyadesams of Lord Mahavishnu. Apart from the spiritual significance of the pilgrimage, one can admire nature in all its glory. The route to all these places is through mountains and so narrow that only one small bus can with difficulty pass through. If you look through the window, you can see that if the bus strays an inch, it will end in a precipitous fall. Only expert drivers can navigate these mountainous tracks. During the entire trip, we could see a number of waterfalls on the way. The mountain ranges are gigantic and in many places, we could see natural formations which looked as if they have been sculpted and chiseled by expert workmen. Yamuna and the Ganges in various nomenclatures travel all the way with you. The Ganges originates in Gangotri as Bhageerathi. It is so named after Bageerathan who after severe penance brought Ganges to earth. The river Mandakini flows from Kedarnath and  the river Alaknanda flows from Badrinath . Along the way, we could see various prayags  such as Rudraprayag(where Alaknanda and Mandakini merge),Karnaprayag(confluence of Alakananda and Pidari Ganga), Nandaprayag(Alakananda and Nandakini),Vishnuprayag(Alakananda and Dowliganga )and Devaprayag( where Alakananda merges with Bageerathi). We could aso see in Mana village near Badrinath the birth place of the River Saraswathi . It starts with such ferocity there, runs for 200 metres then disappears. It later reappears only in Allahabad in the Triveni Sangamam of Ganga, Yamuna and Saraswathi.
Words are insufficient to describe the pristine beauty of the surroundings and the ecstatic pleasure we derived from seeing the mighty nature in all its glory all around us with waterfalls and rivers running with such ferocious sound and  mountains  everywhere, reminding us  how small we are before Mother nature. In all the four holy places, the river water is so icy that we cannot take holy bath. Everywhere, there are hot springs where you can have a dip. It is said that these hot springs contain sulphur and you have to finish your holy dips in seconds.
The yatra was not without its moments of tension. We had so far read about landslides and rockfalls only in newspapers. On our way back from Gangothri, there was a huge landslide and we had to wait for hours in the jeep not knowing when it will be cleared. We could not even get down in the pitch darkness with mountains on one side and the flowing river on the other. In fear and desperation, everyone started chanting Rama nama. Finally, it was nearly 3 hours before the Army came with a JCB and cleared the place.  But in retrospect, these stressful moments only enhanced the thrill and excitement of the Yatra.
The mountain ranges are known for their fickle weather and frequent rainfalls and weather Gods could have at any time played spoilsport with our Yatra. But, luckily, Gods were so kind that on two occasions, we escaped narrowly from the vagaries of weather gods. The road to Gangothri got closed the after we completed our journey there and after days of closure, the road to Badrinath opened only on the date of our visit. 
It was a delight to see the holy rivers in full force travelling along with us. With such vast water resources from these perennial rivers it is shameful that we in the Southern States cry hoarse about water scarcity and fight with neighboring states for water. If only political sanity can prevail, can these rivers not be linked to bring a permanent solution to the problem and bring to  an and this perennial source of dispute between States?