Friday, August 17, 2018

The Cauvery imbroglio
3/4 Months back every conceivable politician and self styled farmers' organisations were raising a hue and cry over over non release of Cauvery water by Karnataka. Cricketers were attacked, cricket matches were stopped and high pitched oratory was there in every nook and corner of the State.Everybody went head over heels in expressing their concern for the farmers. All this hullaballoo was staged even when the Centre was actively engaged in the formation... of Cauvery Water Management Board.
What is the situation now? Karnataka is dumping all their surplus water into Tamilnad and we have no space to store the water and letting more than 75% of the water into the sea.To add insult to injury, the entire river belt is flooded and we are organising relief camps. If we had made proper arrangements for storing the surplus water there would have been no need for us to beg Karnataka for at least two more years. Now we are wasting the precious resources and I am sure we will be staging another agitation next year for getting water from Karnataka. The reasons for this tragedy are too many:
Not arranging for storage of available water. No dam or fresh storage facilities have been created ever since independence.
Even the available lakes and tanks have not been desilted.
There is no trace of many of these waterbodies because they have either been converted into residential plots or rendered useless because of the growth of wild plants.
The greedy poilticians in their anxiety to grab sand have desisted from maintenace of the waterbodies.

The same thing happened in Dec2015 when there was an unprecedented fllod situation in several districts. The water that was let out into the sea in Chennai would have been sufficient to fulfil the water requirements of Chennai for at least 3 years. But six months laterin the summer of 2016 we were experiencing shortage of water.
Every year in the Budget funds are allocated for desilting, fresh storage etc but nothing concrete has been done. Whether the allocation is only on paper or they are misutilised is anybody's guess.
If sufficient funds andper are given to the District Collectors they can get the work done in their respective areas with the help of Self Help Groups and unemployed youth and this will help in employment generation also.
I know I am not saying anything new but I cannot help expressing my anguish.I wish the authorities wake up from their 50 years of deep slumber at least now and do something concrete.
See More

Sunday, June 19, 2016

கலிஃபோர்னியாவில் இசை வெள்ளம்
சில தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னைவாசிகளான நாங்கள் கலிஃபோர்னியாவிற்குசெப்டம்பர் 2015 முதல் மார்ச் 2016 வரை ஆறு மாதங்கள் செல்ல வேண்டிய சூழ்நிலைசென்னையின்டிசம்பர் இசைவிழாவையும் அதை ஒட்டிய உற்சாகங்களையும் இவ்வாண்டு துறக்க வேண்டியிருக்குமேஎன்ற ஏக்கத்துடன் புறப்பட்டு அமெரிக்கா வந்த எங்களுக்கு  இன்ப அதிர்ச்சி.
டிசம்பரில் சென்னையைப் புரட்டிப்போட்ட பேய்மழைவெள்ளம்பால்மின்சாரம்தண்ணீர் இல்லாத ஒருவாரம் இவற்றைத் தவிர்க்க முடிந்தது ஒரு நிம்மதிமார்கழி உத்சவம் என்ற் பெயரில் கலிஃபோர்னியாவில்ஃப்ரீமொன்ட் என்ற இடத்தில் எங்கள் இருப்பிடத்துக்கு அருகிலேயே டிசம்பர் 18 முதல் ஜனவரி 1 வரை நடைபெற்ற இசைவிழாவில் கலந்து கொள்ள முடிந்தது பெரிய இனிய அதிர்ச்சிஇசைவிழா என்றபெயரில் ஏதோ கற்றுக்குட்டிகள் பாடுவார்கள் என்று நினத்துச்சென்ற எங்களுக்கு அந்த  இசைவிழா ஒருமறக்க முடியாத அநுபவம்.
Sponsors, கேண்டீன்சீசன் டிக்கெட்தினசரி டிக்கெட் போன்றவைகளுடன் சாங்கோபாங்கமாக சென்னையில் நடத்தப்படும் இசை விழா ஒரு தனி நபரால் அவரது வீட்டிலேயே அவரது சொந்த செலவில்எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் நடத்தப்பட்டது பேரதிசயம்அவர் வீட்டின் வரவேற்பறையிலேயேஒரு மேடை அமைத்து வருபவர்களுக்கு அமர்வதற்கு carpet ம் முதியவர்களுக்கு வசதியாக நாற்காலிகள்சோஃபாக்கள் இட்டு கூடம் முழுவதும் ஜகஜ்ஜோதியாக விளக்குகள் பொருத்தி மனத்துக்கு இதமானசூழ்நிலையை உருவாக்கி இருந்தனர்.  தினந்தோறும் இரண்டு நிகழ்வுகள்மாலை 4.30 முதல் 6 வரைஜூனியர்களுக்கு வாய்ப்பு.பின்பு 6.30 முதல் 9/9.30 வரை சீனியர்களுக்கு இடம்இரண்டுக்கும் இடையில்இலவச சிற்றுண்டி. 8.15 முதல் வந்தவர்களுக்கெல்லாம் இலவச இரவு உணவுகச்சேரிகள் நேரலையாக you tube ல் ஒளிபரப்பப்பட்டனசெவிக்கும் வயிற்றுக்கும் விருந்து..
தஞ்சை மாவட்டம் வரகூரைச் சேர்ந்த திரு சந்திர சேகரனும் கரூர் மாவட்டம் ஊஞ்ஜலூரைச்சேர்ந்தஅவரது துணைவியார் திருமதி சுதாவும் ஆர்வத் துடன் இணைந்து நடத்தும்  இவ்விழாவில் மருத்துவம்படிக்கும் அவர்கள் மகள் சந்தியாவும்  computer science ல் PHD செய்யும் அவர் மகனும் இணைந்துபணியாற்றுகிறார்கள்அக்கம்பக்கத்திலிருக்கும் நண்பர்கள் ஆர்வத்துடன் உணவு பரிமாறுவது முதலியபணிகளில் உதவி செய்கிறார்கள். 1984 ஆம் வருடம் சென்னை IIT இல் M.TECH பட்டம் பெற்ற திருசந்திரசேகரன் 1989 இல் திருமணம் ஆகும் வரை சென்னையில் TCS இல் பணி புரிந்து பின்னர்அமெரிக்காவில் நிரந்தரமாக வசித்து வருகிறார். CISCO வில் பணி புரியும் இவர் சிறு வயதில் 4 ஆண்டுகள்முறையாக சங்கீதம் பயின்றவர்இங்கு christmas கோலாகலமாகக் கொண்டாடுவதைக்கண்ட இவர் நமதுகலாசாரத்தைப் பறைசாற்றும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்திலும் இங்குள்ளஇசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் ஆர்வத்திலும்  இந்த இசைவிழாவை கடந்த பத்தாண்டுகளாகநடத்தி வருகிறார்.முதலில் தினம் ஒரு கச்சேரியாக 10 நாட்கள் நடைபெற்ற இந்த விழா இப்போது தினசரிஇரண்டு நிகழ்வுகளுடன் 15 நாட்கள் முழு இசைவிழாவாக சக்கை போடு போடுகிறது.
சென்னை இசைக் கச்சேரிகளில் பெரும்பாலும் மூத்த குடிமகன்களையே ரசிகர்கள் இருக்கையில்பார்த்துப் பழகிய எங்களுக்கு பால்மணம் மாறாத சிறுவர்கள் முதல் இருக்கைகளில் அமர்ந்து மிகச்சரியாகத் தாளம் போட்டு ரசிப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு இன்ப அதிர்ச்சியாய் அமைந்தது.  இங்குஇசை கற்பிக்கும் ஆசிரியர்கள் எங்கு கச்சேரி நடந்தாலும் பெற்றோர்கள் குழந்தைகளை தவறாமல்அழைத்துச் செல்லவேண்டும் என்றும் கூடவே இருந்து அவர்கள் தாளம் போடுவதைக் கண்காணிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இங்கு பாடிய யாரும் ஏனாதானோ என்று கடமைக்காகப் பாடவில்லைஆழ்ந்த இசை ஞானத்துடனும்இசையில் மனமார்ந்த ஈடுபாட்டுடனும் இசைக்கும் இவர்களைப் பார்த்து அசந்து விட்டோம்இங்கு பாடியசிறுவர்கள் வயதில்தான் ஜூனியர்கள்ராக ஆலாபனையிலிருந்து நிரவல் ஸ்வரம் வரை அமர்க்களமாகப்பாடி அசத்திவிட்டார்கள்.
திரு சந்திரசேகரையும் அவரது துணைவியாரையும் ஒரு நாள் சந்தித்துப் பேசியபோது கிடைத்த சிலஅரிய தகவல்கள்.;
தேர்ந்த வித்வான்களைப்போல ராகம் தானம் பல்லவியுடன் கச்சேரி செய்த கார்திக்,கௌஷிக்சகொதரர்கள் ph.d முடித்து ஒரு software company இல் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்.
கார்திக் கோபாலரத்னம் மனு தத்தா என்ற நண்பர்கள் வெகு காலமாக சேர்ந்து பாடி வருகிறார்கள்கணீர்என்ற குரலுடன் மனங்கவரப் பாடும் இவர்களும் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பெரிய பதவிவகிப்பவர்கள்.
செவிக்கு விருந்தாக வீணாகானம் இசைக்கும் ஸ்ரீகாந்த் சாரி அவரது மகன் ஹ்ரிஷிகேஷ் சாரி,மகள்ப்ரியங்கா சாரி ஆகியோரும் பெரும்பதவி வகிப்பவர்கள்ஸ்ரீகாந்த் சாரி லால்குடி ஜயராமனிடம்சங்கீதம் பயின்றவர்.
அபாரமான ஞானத்துடன் வயலின் இசைக்கும் அஜய் நரசிம்மனும் வாய்ப்பாட்டில் விற்பன்னரான அனில்நரசிம்மனும் கம்ப்யூட்டர் science லும் phd முடித்தவர்கள்.
75 வயதான திருமதி லலிதா வெங்கடராமன் உடலில் ஒரு சிறிய அசைவு கூட இல்லாமல் வீணையை மிகநளினமாகக் கையாண்டே  அரிய நாதத்தை இசைக்க முடியும் என்று நிரூபித்தவர்இவர் வீணைகற்பிக்கும் குருவும் ஆவார்இவரும் இவரது சிஷ்யரும் சேர்ந்து நடத்திய வீணை இசை இந்த விழாவின்highlights களில் ஒன்று..
பல கச்சேரிகளுக்கு கஞ்ஜிரா வாசித்த திரு அஜய் PHD செய்து வருகிறார்.
பள்ளி செல்லும் பல மாணவர்கள் இங்கு திறமையுடன் பாடினார்கள்இவர்கள் அனைவரும் படிப்பிலும்படு சுட்டிகள்.
மூன்றரை மணி நேரக் கச்சேரி நடத்திய திருமதி ராதிகா ராஜேஷ் திருமதி சுதா ரகுநாதனிடம் சங்கீதம்பயின்றவர்..
விழாவிற்கு முத்தாய்ப்பாக கடைசி நாள் இசை மழை பொழிந்த திருமதி ஆஷா ரமேஷ் ராகமாலிகாஎன்னும் இசைப்பள்ளியை நடத்தி வருகிறார். ' இவர் கச்சேரியின் இறுதியில் சென்னை மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பாக திரு பிரபு என்பவர் இயற்றிய விருத்தத்தைமனமுருகப் பாடினார்.அதன் வரிகள் 
இதோ:

கைலை யே இது

என்றழைக்கப்படும் மயிலையில்  

பார்த்தனுக்கு சாரதியாய் 

பரவசமூட்டும் அழகனுக்கு 

மத்தியில் 

மாபெரும் நகரமோன்று 

வங்கக்கடல்தனின் காற்றில் 

வேர் ஊன்றி வளர்ந்து 

தமிழுக்கும் கல்விக்கும் பண்பிர்கும்  

பெயர் பெற்ற சென்னயில் 

வருணனின் கோபத்தில், இழைத்த கஷ்டத்தில் 

ஜாதி பேதம் என்று பாராமல்  ஒன்று கூடிய 

மக்களுக்கு 

கவசமாய் காத்தருள்வாய் 

கயிலை நாதனே மயிலை நாதனே 

இங்கு பாடிய அனைவரும் பெரும்பாலும் இங்கேயே திரு ஆஷா ரமேஷ்ஹரி தேவ்னாத் மற்றும் திருஸ்ரீவத்சன் ஆகியோரிடம் சங்கீதம் பயின்றவர்கள்., சிலர் கோடை விடுமுறைகளில் சென்னை சென்றுதேர்ச்சி பெற்று வருகிறார்கள். SKYPE மூலம் கற்றுக்கொள்பவர்களும் உண்டு
திரு நெய்வேலி சந்தான கோபாலன்திரு R.K.. ஸ்ரீகண்டன்,  திரு சிக்கில் குருசரண் ஆகியோர்   இங்குவந்து WORKSHOP நடத்திச் செல்கிறார்கள்.
புல்லாங்குழல் இசைத்த திரு மோஹன ரங்கன் சென்னையின் தேர்ந்த  வித்வான்களுக்கு சவால் விடும்அளவுக்கு திறமை பெற்றவர்.
இவர்கள் முழு நேர வேலையையும் பார்த்துக்கொண்டு இசையிலும் தேர்ச்சி பெற்று இசைகற்றுக்கொடுப்பதையும் செய்வதைக் கண்டு ப்ரமிப்பாக இருக்கிறது.
இசை மட்டுமில்லாமல் ,ஸ்லோக வகுப்புகள்திருப்புகழ் வகுப்புகள் வேத வகுப்புகள் ஆகியவையும்  இங்குநடைபெறுகின்றனபல சிறுவர்களும் சகல கலா வல்லவர்களாகத் திகழ்கின்றனர்.
நம் நாட்டில் பெரும்பாலானோர் நமது கலாசார சின்னங்களான இசைவேதம் முதலானவற்றை  விட்டுவிட்டு  எப்பாடு பட்டேனும் ENGINEERING பட்டம் பெற்றுத் தருவதே ஒரே நோக்கமாக மாணவர்களைமனப்பாடம் செய்யும் எந்திரங்களாக மாற்றி வருகிறோமே! Extra curricular activities என்றாலே மானும்மயிலும் ஆடும் RECORD DANCE , குத்துப்பாட்டு போன்ற  மனதைக் கெடுக்கும் நிகழ்ச்சிகள்தான் என்றுஆகிவிட்டது பரிதாபம்

சந்திரசேகர்  குடும்பத்தினரின் தன்னலமில்லாத இந்தப் பணி என்றும் தொடர இறைவனையும் சங்கீதமும்மூர்த்திகளையும் காஞ்சி மகாப் பெரியவாளையும் பிரார்த்திப்போம்.