Saturday, January 7, 2012

margazhi


மாதங்களில் அவள் மார்கழி
மார்கழி மாதம் என்றாலே தென்னாட்டு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தனி உற்காகம்தான். அப்படியென்ன மார்கழி மாதத்திற்கு தனிச்சிறப்பு? ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல?
‘மாசாநாம் மார்கசீர்ஷோகம்’ என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார். மாதங்களில் நான் மார்கழி’ என்று பொருள்படும் இவ்வரிகள்தான் கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலுக்கு உத்வேகம்.
மார்கழி மாதம் முழுவதும் தென்னாட்டில் பக்திக்கும் ஆன்மீகத்துக்குமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. விடியற்காலையில் எழுந்து ஆலய தரிசனம் செய்து நாமசங்கீர்த்தனம் கேட்டு/செய்து கொசுறாக சுடச்சுட பொங்கல் பிரசாதத்தையும் ருசிக்கலாம். பழைய நாட்களில் நகர சங்கீர்த்தனம்(பஜனை செய்து கொண்டே நகர வீதிகளை வலம் வருவது) மிகப்பிரசித்தம்.(அன்னியன் திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்த ஞாபகம் வருமே?)இப்பொழுதும் சிறிய ஊர்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை(30 பாசுரங்கள்) மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை(20 பதிகங்கள்),திருப்பள்ளியெழுச்சி(10 பதிகங்கள்) ஆக 60 சொல்மாலைகளும் மார்கழி மாதம் முழுவதும் விடியற்காலையில் பக்தி பரவசத்துடன்  பலரால் குறிப்பாக பெண்களால் படிக்கப்படுகின்றன.ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் என்று போற்றப்படுபவை.அனேகமாக எல்லா தமிழ் tv channel களும் இப்பாசுரங்கள்/பதிகங்களை காலை நேரத்தில் இசையுடனும் நடனத்துடனும் பேரரிஞர்களின் விளக்க உரையுடனும் ஒளிபரப்புகின்றன.மேலும் தமிழ் நாடெங்கும் பல இடங்களில் திருப்பாவை/திருவெம்பாவை  சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
மார்கழி மாதத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் வீட்டு வாசல்களில் பெண்களால் போடப்படும் அழகழான வண்ணமயமான கோலங்கள். இந்த வண்ணக்கோலங்களுக்கக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் அளிக்கப்படுகின்றன.
மார்கழி மாதத்தில் திருமணம்,நிச்சயதார்த்தம் போன்ற மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. இந்த ஒரு மாதம் மட்டுமாவது மனது முழுதுமாக பக்தி மார்கத்தில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்பது காரணமாக இருக்குமோ?
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ப்ரசித்தி பெற்ற விழாவான ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்தான் கொண்டாடப்படுகிறது.திருவாதிரை என்றாலே என்னைப்போன்ற உணவுப்பிரியர்களுக்கு நினைவுக்கு வருவது அன்று நைவேத்யமாகச்செய்யப்படும் களியும் அதற்குத்துணையாக பல கறிகாய்களைக்கொண்டு செய்யப்படும் நாவில் எச்சில் ஊறச்செய்யும்  திருவாதிரைக்கூட்டும்தான்.
வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகப்போற்றப்படும் முக்கிய ஏகாதசி தினமும் மார்கழி மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது.ஸ்ரீரங்கம்,திருப்பதி போன்ற முக்கியமான வைஷ்ணவத்திருக்கோவில்களில் அன்றுதான் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.அன்று இவ்வாசலைக்கடந்து செல்பவர்கள் நேரே சொர்க்கத்திற்குச்செல்லும் பாக்யம் பெறுகிறார்கள் என்பது ஐதீகம். அதனாலேயே விடியல் முதலே அவ்வாசலைக் கடந்து பெருந்திரளான மக்கள்  கண் விழித்துக் காத்திருப்பதைக்காணலாம்.
சிறு வயதில் சொர்க்க வாசலை மிதித்து விட்டு சிறுவரும் பெரியோரும் விளையாடும் பரமபத சோபான படம் என்ற விளையாட்டு இன்னும் நினைவில் இருக்கிறது.ஏணீயும் பாம்புகச்ளுமாக இருக்கும் இந்தப் பட விளையாட்டு சோழி அல்லது dice  கொண்டு விளையாடப்படும்.ஏணியில் ஏறினால் சொர்க்கத்தை நொக்கிச் சென்றும் பாம்பில் மாட்டிக்கொண்டால் கீழே கீழே இறங்குவதும் இவ்விளையாட்டின் சுவாரஸ்யம்.
சென்னையின் முக்கியத்திருவிழாவான இசை விழா பெரும்பாலும் இந்த மார்கழி மாதத்தில்தான் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment